wjoel 1777 180403 youtube 003.0
தொழில்நுட்பம்

மீண்டும் ‘யூடியூப்’பில் அப்டேட்

Share

யூடியூப் செயலியின் அனைத்து தளங்களிலும் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஷாட்ஸ் மற்றும் லைவ் வீடியோ பிரிவுகளுக்கு தனியே புது டேப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் சேனல் பேஜசில் செய்யப்படுகின்றன. இதன் மூலம் பயனர்கள் இடையூறில்லா வியூவிங் அனுபவத்தை பெறலாம்.

இதுதவிர கிரியேட்டர்கள் மற்றும் யூடியூபர்கள் தங்களின் தரவுகளை ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப சிறப்பாக பிரித்து காட்சிப்படுத்த முடியும். டிக்டாக் வெளியானதில் இருந்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் குறுகிய நேரத்தில் ஓடும் வீடியோ ஃபார்மேட்டை வழங்க துவங்கி விட்டன. அந்த வகையில் யூடியூப் ஷாட்ஸ் டிக்டாக் போட்டியாளராக கூகுள் அறிமுகம் செய்த சேவை ஆகும்.

1783388 youtube tabs

வீடியோ மற்றும் ஷாட்ஸ் பிரிவுகளில் ஒவ்வொரு வீடியோவும் பக்கவாட்டுகளில் மாறும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. ஷாட்ஸ் வீடியோக்களின் தம்ப்நெயில் செங்குத்தாக செவ்வக வடிவில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வீடியோக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாக மாறிக் கொண்டே இருக்கும். தற்போது யூடியூபில் ஷாட்ஸ் மற்றும் வீடியோக்களுக்கு தனி டேப்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு செய்வதில் பயனர்கள் அவர்கள் விரும்பும் ஷாட்ஸ், வீடியோ அல்லது லைவ் ஸ்டிரீம் உள்ளிட்டவைகளை அதன் டேப்களில் இருந்தபடி பார்க்க முடியும். இதனால் அனைத்து தரவுகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும். மேலும் பயனர் அதிகம் விரும்பும் பிரிவில் அந்த டேபிற்கு நேரடியாக சென்று தரவுகளை பார்த்து ரசிக்கலாம்.

#technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...