500x300 1723843 whatsapp 1
தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் – இல் வருகிறது புதிய அப்டேட்

Share

வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன் 2.22.23.14/15 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புது அப்டேட்டில் மல்டி டிவைஸ்-க்கான லாக்-அவுட் ஸ்கிரீன், புகைப்படம், வீடியோ, ஜிஃப் மற்றும் டாக்யுமெண்ட் உள்ளிட்டவைகளை கேப்ஷனுடன் ஃபார்வேர்டு செய்யும் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

லாக்-அவுட் ஸ்கிரீனை மேம்படுத்தும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. புதிய லாக்-அவுட் பகுதி வாட்ஸ்அப்-இல் இருந்து லாக்-அவுட் செய்ததும் காண்பிக்கும். செயலியின் செட்டிங்ஸ்-இல் இருந்தபடி இரண்டாவது சாதனத்தில் இருந்து லாக்-அவுட் செய்ய முடியும்.

1782364 wa logout

வாட்ஸ்அப் செட்டிங்ஸ் — லின்க்டு டிவைசஸ் ஆப்ஷன் மூலம் பிரைமரி போனில் இருந்து டேப்லெட் செஷனை விட்டு வெளியேற முடியும். மேலும் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் — அக்கவுண்ட் ஆப்ஷன்களில் இருந்து நம்பரை மாற்றுவதற்கான “சேஞ்ச் நம்பர்” அம்சம் இடம்பெற்று இருக்கிறது.

இத்துடன் புகைப்படம், ஜிஃப், வீடியோ உள்ளிட்டவைகளை ஃபார்வேர்டு செய்யும் போது அவற்றுக்கு தலைப்பிடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தரவுகளை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் தலைப்பை பார்க்க முடியும். இதே வசதி டாக்யுமெண்ட்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு அம்சங்களில் லாக்-அவுட் ஸ்கிரீன் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைவருக்குமான வெர்ஷனில் வெளியாகும் முன் இந்த அம்சம் தொடர் சோதனை செய்யப்படும். ஃபார்வேர்டு மீடியா வித் கேப்ஷன் அம்சம் பீட்டா பயனர்களில் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

#technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
s.media
தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்கள் முடக்கம் – பயனர்கள் அவதி .

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகளாவிய ரீதியில் முகநூல் சமூக வலைத்தளம் இவ்வாறு முகநூல் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...