பாகிஸ்தானை எளிதாக எண்ணிவிட முடியாது என, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்றுப் போட்டி, டுபாயில் இன்று நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இப்போட்டியைக் காண்பதற்கு இரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ள நிலையில், இது தொடர்பில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
இதன்போது, பாகிஸ்தான் வலுவான அணி எனக் குறிப்பிட்டுள்ள அவர், அவர்களுக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்தையும் மிகத் திறமையாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியினரை எளிதாக எண்ணி ஆட்டத்தை சாதாரணமாக ஆட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#sports
Leave a comment