tamilni 38 scaled
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விசாரணைகளை முன்னெடுக்க 2 குழுக்கள்

Share

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விசாரணைகளை முன்னெடுக்க 2 குழுக்கள்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய, குறித்த விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த இரு குழுக்கள் இன்று(03.10.2023) குறித்த முல்லைத்தீவு நோக்கி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அழுத்தம் மற்றும் அச்சுறுத்தலுக்கு எதிராக நேற்று ஆரம்பித்த காலவரையறையற்ற தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

மேலும் நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பரஞ்சோதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...