இலங்கை
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலக சட்டமா அதிபரே காரணம்
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலக சட்டமா அதிபரே காரணம்
சட்டமா அதிபரின் அச்சுறுத்தலினாலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை கண்டித்தும் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்வத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் போராட்டமொன்றினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்த நிலையில், நாளை(02.10.2023) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சர்வதேசததிற்கு எடுத்துக் காட்டும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.