இலங்கை
யாழில் மனித சங்கிலி போராட்டம்
யாழில் மனித சங்கிலி போராட்டம்
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டம் காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதுடன் பல பொது அமைப்புகளும் இணைந்துள்ளனர்.
இதேவேளை போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.