தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி
இலங்கைசெய்திகள்

தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி

Share

தியானத்தில் இருந்த பௌத்த தேரருக்கு நேர்ந்த கதி

அம்பாறை – பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள மகா விகாரையின் பௌத்த தேரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் சிலரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட எட்டுச் சந்தேக நபர்களும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் 34, 40, 39, 34, 38, 43 மற்றும் 56 வயதுடையவர்களாவர்.

பொத்துவில் – முஹுது மகா விகாரையின் காட்டுப் பகுதியில் உள்ள பாறைக் குகை ஒன்றில் தியானம் செய்து கொண்டிருந்தபோதே தேரரிடமிருந்து 57,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்ட கைத்தொலைபேசி மற்றும் பணத்தை கைப்பற்றிய பொத்துவில் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...