இலங்கை
இலங்கையின் முக்கிய பகுதியில் குவிந்த வெளிநாட்டு பயணிகள்
இலங்கையின் முக்கிய பகுதியில் குவிந்த வெளிநாட்டு பயணிகள்
அண்மைய நாட்களில் எல்ல நகரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் வரலாற்று சிறப்புமிக்க தெமோதர ஒன்பது வளைவு பாலத்தை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வரிசையில் நிற்பதனையும் அவதானிக்க முடிந்துள்ளது.
பொடிமனிக்கே ரயில் நேற்று காலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது தெமோதர பாலத்திற்கு அருகில் நின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கமராக்களுடன் காத்திருந்துள்ளனர்.
ரயில் கடக்கும் போது பாலத்தை ரயிலையும் புகைப்படம் எடுத்து வெளிநாட்டவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
You must be logged in to post a comment Login