arrest
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வயோதிப பெண்மணியை அறையினுள் பூட்டிவைத்து விட்டு திருட முயன்றவர் கைது!

Share

வயோதிப பெண்மணியை அறையினுள் பூட்டிவைத்து விட்டு திருட முயன்றவர் கைது!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய நபர் ஒருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

திருநெல்வேலியில் வயோதிப பெண்மணி வசிக்கும் வீடொன்றினுள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் , வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வீட்டினுள் உள்ள அறை ஒன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தியுள்ளார்.

அவ்வேளை அறையினுள் பூட்டப்பட்டு இருந்த பெண்மணி அபாய குரல் எழுப்பவே, அயலவர்கள் வீட்டிற்கு சென்ற போது , வீட்டினுள் இருந்து நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போது வயோதிப பெண் அறை ஒன்றினுள் வைத்து பூட்டப்பட்டு இருப்பதனை அவதானித்து அறையை திறந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

அதேவேளை வீட்டில் இருந்த பொருட்கள் கலையப்பட்டு காணப்பட்டன.

அதனை அடுத்து , வீட்டில் இருந்து தப்பி சென்ற நபரை ஊரவர்கள் தேடி மடக்கி பிடித்து விசாரணைகளை மேற்கொண்ட போது , அந்நபரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது பையில் , பித்தளை பொருட்கள் சிலவும் காணப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த நபரிடம் தன்னை அடையாளப்படுத்த கூடிய எந்த ஆவணங்களும் இருக்கவில்லை.

அதனை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி , பொலிஸாரிடம் அந் நபரை ஒப்படைத்துள்ளனர். அந்த நபரை கைது செய்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு பகுதியில் வயோதிபர்கள் ஐவர் படுகொலை செய்யப்பட்டு , அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் , இந்த சம்பவம் குறித்த வீட்டின் அருகில் வசிக்கும் அயலவர்கள் மத்தியில் மேலும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...