202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

விமான நிலையத்தில் குண்டு – மாணவன் கைது!!

Share

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தன்னுடைய அலைபேசியில் இருந்து போலியான அழைப்பை எடுத்து அச்சுறுத்தல் தகவலை வழங்கிய 14 வயதான மாணவன், கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் என விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

விமான நிலையத்தின் அவசர பிரிவுக்கு நேற்று (25) மாலை அழைப்பு எடுத்திருந்த மேற்படி மாணவன், விமான நிலையத்துக்குள் குண்டு இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார்.

அந்தத் தகவலின் பிரகாரம் உடினடியாக சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

எனினும், சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் அழைப்பை எடுத்த அதே மாணவன், “ குண்டு இல்லை. நகைச்சுவைக்காக அழைப்பை எடுத்தே இவ்வாறு பொய் கூறினேன்” என தெரிவித்துள்ளார்.

அலைபேசியின் அழைப்பை வைத்து, களுபோவில சுனந்தாராம வீதியை வீதியைச் சேர்ந்த மாணவனை பொலிஸூக்கு அழைத்த பொலிஸார், இதன் பாரிய விளைவுகள் தெரியாமல் அழைப்பை ஏற்படுத்தியமையால், கடுமையாக எச்சரித்து மாணவனை விடுவித்துள்ளோம் என்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
chemmani 22
இலங்கை

செம்மணி மனித புதைகுழியினை பார்வியிட்ட ஐரோப்பிய தூதுக்குழுவினர்.

இன்று, யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைக்குழிகளை, ஐரோப்பிய ஒன்றிய...

dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...