ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

பொருளாதார மறுசீரமைப்பே IMF ஒப்பந்தம்!

Share

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியையும் உதவியையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சட்டப்படி அனுமதி தேவையில்லாத போதிலும் அதனை பெறவுள்ளதாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் வியாழக்கிழமை (23) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையானது பொருளாதாரத்தின் மறுசீரமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் கடனில் மட்டுமின்றி இந்த ஒப்பந்தத்தை நாடு அமுல்படுதுமா? இல்லையா? என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தெரிவித்த அவர்,  கடனை கட்டவேண்டுமாயின் வீட்டிலிருக்கும் ஒரு பொருளை விற்றே ஆகவேண்டும் என்றார்.

எல்லா பங்கங்களிலும் தவறுகள் உள்ளன. அவற்றை திருத்திக்கொண்டு இணைந்து உதவுங்கள், சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி பழைய விளையாட்டை விளையாட முடியாது. பல திட்டங்களை எதிர்த்தவர்கள் எம்மோடு இருக்கின்றனர் என்றால் நல்லதுதானே என்றார்.

அரசாங்கத்தி செலவை குறைக்கவேண்டும் வருமானத்தை அதிகரிக்கவேண்டும் அத்துடன் பணவீக்கத்தை குறைக்கவேண்டும். நாட்டை மீண்டெழச் செய்வதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது வரலாற்று மாற்றம் என்றார்.

#SriLankanNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...