essential items 7989 scaled
இலங்கைசெய்திகள்

பதுக்கும் பொருள்களை நிவாரண விலைக்கு வழங்குக!

Share

சட்டத்துக்கு முரணான வகையில் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கினால் அவற்றை மீட்டு மக்களுக்கு நிவாரண விலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்.

இதனை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.

நெல், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்குதல், விநியோகத்தை தவிர்த்தல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட மக்களை அசௌகரியத்திற்துக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளையும் தடுப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பொதுமக்கள் கட்டளை சட்டத்தின் கீழ் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அதற்கமைய சட்டத்துக்கு புறம்பாக பொருள்களை  பதுக்கி  அவை இனங்காணப்பட்டால், அவற்றை கைப்பற்றி மக்களுக்கு நியாயமான விலைக்கு விநியோகிப்பதற்கு சகல மாவட்ட அரசாங்க அதிபர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...