Susil Premajayantha 3 750x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சுசிலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!

Share

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது தன்னை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை அமர்வின் போது, தனது கேள்விக்கு பதிலளித்த குறித்த வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியதாக ரோஹினி எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கருத்து பல்வேறு தளங்களில் வலம் வந்தாகவும், தாய் மற்றும் பெண் என்ற தனது பொதுப் பிம்பத்தை பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறான சம்பவங்களால் பாராளுமன்றம் மற்றும் எம்.பிக்கள் மீதான மக்களின் அணுகுமுறை எவ்வாறு அமையும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிடம் சமர்ப்பித்து  சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...

Missing Persons
இலங்கை

காணாமல் போனவர்களுக்கு  நடந்தது என்ன ?

இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. இவ்வாறு...