senthil
அரசியல்இலங்கைசெய்திகள்

விலங்குகளை கொல்வது பெரிய அநீதி!!!

Share

விவசாய நிலங்களுக்குள் உட்புகும் சில விலங்குகளை கொல்வதற்கு  விவசாய அமைச்சு வழங்கியுள்ள அனுமதிக்கு சேவலை சின்னமாகக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

குரங்குகள்,மயில்கள் அணில்கள்,பன்றிகள் மற்றும் முள்ளம்பன்றிகளை கொல்வதற்கு  வழங்கியுள்ள அனுமதியை ஏற்றுகொள்ள முடியாது.  மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காது  உணவைத் தேடி செல்லும் விலங்குகளை கொல்வது என்பது பெரிய அநீதியாகும் என்று காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த விலங்குகள் வசிக்கும் காடுகளை அழித்து கட்டடங்களை கட்டுதல் மற்றும் இயற்கைக்கு ஒவ்வாத விடயங்களை மேற்கொள்வதால் தான் விலங்குகள் உணவு பற்றாக்குறையால்  தமது உணவு தேவையை பூர்த்தி செய்துகொள்ள மனிதன் வசிக்கும் பகுதிகளுக்கு வருகின்றன. ஆகவே காடுகளை அழித்து கட்டடங்களை நிர்மாணிக்க அனுமதி வழங்கிய அதிகாரியின் மீதும் திணைக்களத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கைகளை விலங்குகள் மீது அல்ல. எனவே இந்த முடிவை உடனடியாக விவசாய அமைச்சு மீள்ப்பெற  வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...