russia
உலகம்செய்திகள்

தொடரும் மோதல் – 61 ரஸ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்

Share

உக்ரைன் மீது ரஸ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கிய ரஸ்ய படைகள், உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி உள்ளன.

மேற்கத்திய நாடுகளின் உதவியால் ரஷியா தொடர்ந்து ரஸ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஸ்ய படைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி தாக்குதல் நடத்திய ரஸ்யா, பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மின்நிலையங்கள் என முன்னேறி ஆக்ரோஷமாக தாக்குதல்களை நடத்துகிறது. இதில் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். ரஸ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ரஸ்யா இன்றும் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. மொத்தம் ரஸ்யா தரப்பில் 71 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 61 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை மற்றும் ராணுவத்தின் பிற படைப்பிரிவினர் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் வான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திவிட்டதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்தார். ரஸ்யாவால் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாததால் மக்களை தொடர்ந்து பயமுறுத்துகிறது. உக்ரேனிய எரிசக்தி அமைப்பை அழித்து, உக்ரேனியர்களுக்கு மின்சாரம், லைட், தண்ணீர் சப்ளை கிடைக்காமல் செய்வதற்காக மற்றொரு முயற்சி இது என்றும் அவர் குறிப்பிட்டார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...