image c4cb32b7b8
இலங்கைஉலகம்செய்திகள்

மியன்மார் அகதிகள் யாழ். சிறையில்

Share

யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் நேற்று (19) இரவு 8 மணி அளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டனர்.

காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் டிசம்பர் 17 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18 ஆம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே 104 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

மேலும், யாழ்ப்பாணம், மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் (UNHCR) பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அகதிகள் அனைவரையும் மீரிகாண தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...