1671435449 mava 2 e1671438866832
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் மாணவர்களுக்கு தயாராக இருந்த போதைப்பொருள் மீட்பு! – ஒருவர் கைது

Share

பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த கஞ்சா கலந்த மாவா, யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா கலந்த மாவா பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென பொட்டலங்களாக கட்டப்பட்டு தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தான் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருளை விற்பனை செய்வதாகவும் தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணைகளின் பின் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...