university
இலங்கைசெய்திகள்

மாணவன் மீது தாக்குதல்! – பேராதனையில் மீண்டும் சம்பவம்

Share

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனை தாக்கிய சம்பவம் ஒன்று, நேற்று (17) பதிவாகியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஐய்வர் ஜெனிக்ஸ் விடுதிக்குள் இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிரேஷ்ட மாணவன் மதுபோதையில் வந்து, முதலாம் வருட மாணவனைத் தாக்கியதாகவும் இதன்போது காயமடைந்த மாணவன் பேராதனை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான முதலாம் வருட மாணவன் நோட்டன்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தாக்குதல் நடத்திய மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் பேராதனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ​பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பேராதனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...