image dcde8e0b86
இலங்கைசெய்திகள்

மின் கட்டண உயர்வு! – முடிவில்லை என்கிறது ஆணைக்குழு

Share

மின் கட்டண உயர்வு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

மின் கட்டண உயர்வை அறிவிக்கும் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவால் வழங்கப்பட வேண்டும். அமைச்சரவை அமைச்சர் தனது ஓய்வு நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட முடியாது என்று தெரிவித்த அவர், நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளது. அதன்படி செயற்பட வேண்டும் – என்றார்.

மேலும், மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக எந்த அறிவிப்புகளையும் ஆணைக்குழு விடுக்கவில்லை என்றும் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...