wp7849047
இந்தியாசெய்திகள்

உதயநிதிக்கு அமைச்சுப்பதவி!

Share

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடினார். வழக்கத்தை விட தி.மு.க.வினர் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடினார்கள்.

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க.வின் பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனது தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் அமைச்சரவையில் இடம்பெறுவீர்களா என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

மக்கள் பணி செய்வதையே உறுதிமொழியாக எடுத்து இருக்கிறேன். தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராகப் போகிறேன் என்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சொல்லி வருகிறார்கள். அதுபற்றி தி.மு.க. தலைவர் (மு.க.ஸ்டாலின்) தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 59
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தீவு முழுவதும் 2,000 அதிகாரிகள் களத்தில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்,...

world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...