IMF SriLanka
அரசியல்இலங்கைசெய்திகள்

வருட இறுதிக்குள் IMF உதவி

Share

அடுத்த மாதத்தின் முதல் வாரத்துக்குள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தலாக உள்ளது.

எனவே இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ் வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சபையில் தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனும்,உலக வங்கியின் பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கியின் பிரதிநிதிகளும் உறுதியளித்துள்ளனர். அதேபோல் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...

Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...