download 6
அரசியல்இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு மீண்டும் தடை!!

Share

தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவை மீண்டும் தடைபட்டியலில் சேர்க்கப்படும் – என்று ஆளுங் கூட்டணியின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு, அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்றது.

இதன்போது சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்கள்மீதான தடை நீக்கம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மொட்டு கட்சி எம்பியான ஜகத் குமார இவ்வாறு குறிப்பிட்டார்.

” உரிய ஆய்வுகளின் பின்னரே, சில அமைப்புகள் மற்றும் நபர்களை தடை பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ளது. இதில் எவ்வித தவறும் கிடையாது. நாம் உலகுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.

தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் நாட்டுக்கு நேசக்கரம் நீட்டலாம். குறைந்தபட்சம் வடக்கு, கிழக்கையாவது மேம்படுத்த உதவலாம்.

சிலவேளை, அவ்வமைப்புகள் எமது நாட்டுக்கு, சட்டத்துக்கு எதிராக செயற்பட்டால் மீண்டும் தடை செய்ய முடியும். அதற்கான ஏற்பாடுகள் உள்ளன.” – எனவும் ஜகத் குமார எம்.பி. சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...