Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு திரும்புகிறார் கோட்டா?

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.

” இலங்கையில் இருந்து மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார், தற்போது தாய்லாந்து சென்றுள்ளார். எதற்காக இவ்வாறு சுற்றி திரிகின்றார், அவருக்கு இலங்கை வருவதற்கு உகந்த சூழ்நிலை இல்லையா” – என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

” அவ்வாறு எந்த தடையும் இல்லை, அவர் விரும்பிய நேரத்தில் நாடு திரும்பலாம். அவருக்கென சில பணிகள் இருக்கலாம். அந்த பணிகள் முடிவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயம் நாடு திரும்புவார். இலங்கைதான் அவரின் நாடு.” – என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த குறிப்பிட்டார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...