jeyshankar
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியாவே உதவியது!

Share

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நிலைமை குறித்து ஆராய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இந்தியாவில் நேற்று நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில், ப சிதம்பரம், பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு, எம் தம்பிதுரை, வைகோ, உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர். மேலும், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்பட 8 மத்தியஅமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிக்கையில்,

இன்றைய கூட்டத்தில் இலங்கைக்கு உதவும் நடவடிக்கைகள் குறித்து அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கை கண்ணோட்டத்தில் நாங்கள் விளக்கம் அளித்தோம். இலங்கையின் தற்போதைய அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் நிலைமை குறித்து விளக்கப்பட்டது.

நமது அண்டை நாட்டில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதால், அது எங்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயம். மீனவர் பிரச்சினை உள்பட இலங்கையுடன் நீண்ட கால பிரச்சினைகள் உள்ளன.

இந்த ஆண்டு இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதி உதவி போல் வேறு எந்த நாடும் இந்த அளவு ஆதரவை வழங்கவில்லை. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலர், இலங்கை பொருளாதார நெருக்கடியை இந்தியா ஒரு பாடம் போல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினர் – என்றார்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal Rajapaksa 03
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை...

IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....