sajith
செய்திகள்இலங்கை

தோல்வியை ஏற்றுக்கொண்டு நாட்டை எம்மிடம் ஒப்படையுங்கள் – சஜித் சவால்!

Share

தோல்வியை ஏற்றுக்கொண்டு நாட்டை எம்மிடம் ஒப்படையுங்கள் – சஜித் சவால்!

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியவில்லை எனில், நாட்டின் ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொலியில் கோத்தாபய தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குறித்த பதிவில் மேலும் உள்ளதாவது,

நாட்டில் வர்த்தக நிலையங்களிலும், சதொச நிலையங்களிலும் பொருள்களுக்காக மக்கள் வரிசையில் நிக்கின்றனர். எங்கு பார்த்தாலும் பொருள்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விலை குறைத்து வழங்குவோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு தற்போது பொய்யர்கள் ஆகியுள்ளது.

எமது நாட்டில் என்ன நடக்கின்றது? அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுங்கள். சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண உதவி வேண்டுங்கள். இதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.

நாடு உடைந்து விழுவதை பார்த்துக்கொண்டு, அரச பலத்தை பெற்றுக்கொள்ள எமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அபிவிருத்தியடைந்த, சௌபாக்கியமான ஒரு நாடு, நாடு அபிவிருத்தி அடையும் ஒரு யுகம் தான் எமக்கும் தேவை.

இந்த நாட்டை கட்டியெழுப்ப, மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்த, மக்களை வாழ வைக்க எங்களுக்கு முடியும்.

இவற்றை கருத்தில் கொண்டு, நான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, மக்கள் நலன் கருதி பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

உங்களுக்கு இந்த நாட்டை சரியான முறையில் ஆட்சிசெய்ய முடியாவிட்டால், நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கமுடியாவிட்டால், உங்களால் உருவான பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடிய விட்டால், அதனை ஏற்றுக்கொண்டு, நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் சந்தர்ப்பத்தை எங்களுக்கு தாருங்கள் என இந்த அரசாங்கத்திடம் தெளிவாக ஒரு வேண்டுகோளை விடுகின்றேன். என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...