covid cells
செய்திகள்இலங்கை

வடக்கில் 33 பேருக்கு தொற்று உறுதி!

Share

வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் 267 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் 6 பேர்,வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 3 பேர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர் தோற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 2 பேர்,
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 2 பேர், நொதேர்ன் சென்ரல் தனியார் மருத்துவமனையில் ஒருவர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் 3 பேரும்,மன்னார் மாவட்ட மருத்துவமனையில் 2 பேரும்,
வவுனியா மாவட்ட மருத்துவமனையில் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காங்கேசன்துறை கடற்படை முகாமிலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...