கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் கொரோனாத் தொற்றால் இதுவரை 16க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை 160க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மருத்துவமனையின் மருத்துவர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனையில் தினமும் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அவர்களில் நான்கு சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.
தேவையான மருந்துகள் கைவசம் உள்ளன . அனுமதிக்கப்படும் சிறுவர்களுக்கு படுக்கைகள் வழங்கப்படு வதை உறுதிசெய்ய மருத்துவமனை ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a comment