University of Jaffna 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலை மாணவிகளைத் தாக்கிய இருவர் கைது!

Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் அத்துமீறி நுழைந்து வெளியாள்கள் இருவர் அங்கிருந்த பல்கலைக்கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சமயம் மாணவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

யாழ். பல்கலைத்தில் தியாகி பொன். சிவகுமாரன் நினைவு தினம் நேற்று மாலை இடம்பெற்றது. அதற்காக மாணவர்கள் அங்கு வருகை தந்திருந்தனர். அந்த நிகழ்வு முடிவுற்ற பின்னர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நின்ற மாணவிகள் மீது வெளியில் இருந்து வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கிருந்த ஆண் மாணவர் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டபோது ஏனைய மாணவர்கள் ஒன்றுசேர்ந்த அந்த இருவரையும் மடக்கினர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிஸார் தாக்குதல் நடத்திய இருவரையும் கைதுசெய்தனர்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...