கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு! – பொலிஸ் தீவிர விசாரணை

Share

காணாமல்போன குடும்பப்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாத்தளை மாவட்டம், கலேவெல பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஆர்.எம்.பத்மலதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்றுமுன்தினம் இரவு முதல் காணாமல்போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அருகில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்றிருந்தார் என்று உயிரிழந்த பெண்ணின் கணவர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மறுநாள் காலை வரை மனைவி வீடு திரும்பாத காரணத்தால், வீட்டுக்கு முன்னால் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் மனைவியின் காலணி இருப்பதைக் கண்டு, கிராம மக்களுடன் சேர்ந்து கிணற்றில் தேடினார் என்றும் கணவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...