IMG 20220528 WA0004
அரசியல்இலங்கைசெய்திகள்

சபாநாயகர் – அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

Share

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ,சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (27) சந்தித்து பேச்சு நடத்தினார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் முடியும் என தான் நம்புவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோன்று மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கை – ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தஎதிர்பார்ப்பதாகவும் ஜூலி சங் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மேற்கொள்ளும் பணிகளை பாராட்டிய அவர், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.

இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கிவரும் பங்களிப்புக்குச் சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஜூலி சங், இந்நாட்டுக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டதை அடுத்து சபாநாயகருடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
face book
இலங்கை

முகநூலால் சீரழிந்த வாழ்க்கை!

இந்த வருடம், கதிர்காமம் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில்...

suicide
இலங்கை

தன்னைத்தானே சுட்டு கொண்ட காவல் அதிகாரி!

பாணத்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால்...

jail sentence
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை...

ஹர்ச நாணயக்கார
இலங்கை

செம்மணி தொடர்பில் புதிய சர்ச்சை – அமைச்சர் ஹர்ச நாணயக்கார வெளியிட்ட தகவல்கள்.

செம்மணி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித என்புத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ஹர்ச நாணயக்கார வெளியிட்ட...