Gota 4
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுடன் இணைந்து நாட்டை மீட்டெடுப்பேன்! – கோட்டா சபதம்

Share

“புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்தார்.

அமைச்சர்களுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் கூறினார் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

“பொருளாதார நெருக்கடியில் இருந்து என்னால் மாத்திரம் இலங்கையைக் காப்பாற்ற முடியாது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் திறன் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உண்டு. அதனால்தான் அவரைப் புதிய பிரதமராக நியமித்துள்ளதுடன் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுப் பொறுப்புக்களையும் அவரிடம் ஒப்படைத்துள்ளேன். அதேவேளை, திறமைமிக்கவர்களை அமைச்சரவைக்கு உள்வாங்கி வருகின்றேன். அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவை நியமனம் முழுமை பெறும்.

அமைச்சரவை நியமனம் முழுமை பெற்றவுடன் ஜனாதிபதி பதவியிலிருந்து நான் விலகுவேன் என்று சில ஊடகச் செய்திகளைப் பார்த்தேன். எனினும், நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன்.

ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சரவை ஓரணியில் செயற்பட்டால்தான் நாட்டுப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாண முடியும்.

இந்தப் புதிய அரசு சவால்களை எதிர்கொண்டு வெற்றிநடை போடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

எதிரணியினரை நான் பகைக்கவில்லை. அவர்களையும் அரவணைத்துக்கொண்டு நாட்டுக்காக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்” என ஜனாதிபதி மேலும் கூறினார் என்றார் அமைச்சர் பீரிஸ்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...