gotabaya
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டுக்கட்சியினரை சந்திக்கிறார் ஜனாதிபதி

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (14) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி விலகியபின்னர், பொதுஜன பெரமுனவின் அரசும் கலைந்தது. இந்நிலையில் புதிய அரசை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
இந்நிலையிலேயே மொட்டு கட்சி எம்.பிக்களை சந்தித்து, ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதற்கிடையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 10 கட்சிகளின் பிரதிநிதிகள், ரணிலுக்கு ஆதரவு வழங்கக்கூடும் என அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் மூவர் நாடாளுமன்றம் வருவதற்காக, மொட்டு கட்சியின் தேசிய பட்டியல் எம்.பிக்கள் மூவர், தமது பதவியை துறக்க தயாராக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...