WhatsApp Image 2022 04 26 at 1.21.07 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமர் இல்லம் முன்பு முளைத்தது ‘மைனாகோகம”

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி காலி முகத்திடல் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக, ‘மைனாகோகம” என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி பிரதமர் இல்லம் முன்பாகவும் கடந்த சில நாட்களாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையிலேயே அங்கு, ‘மைனாகோகம” எனும் பெயரில் புதிய கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் நிராகரித்திருந்தது.

ஏற்கனவே காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ எனும் பெயரில் கிராமம் அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்கார்கள் அங்கு தொடர்ச்சியாக தங்கி போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2022 04 26 at 1.21.01 PM

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....