WhatsApp Image 2022 04 12 at 4.26.29 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்! – இதுவரை 735 பேர் கைது என்கிறார் கமல் குணரத்ன

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன – என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய வகையில் விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம். இதுவரை உரிய வகையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இனியும் முன்னெடுக்கப்படும்.

இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 196 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் பரந்துபட்ட விசாரணை முன்னெடுக்கப்படுவருகின்றது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...