tmvp
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு செய்த கொடுமையே ஆட்சியாளர்களுக்கு சாபக்கேடாக மாறியுள்ளது!

Share

73 வருடமாக தமிழ் மக்களுக்கு செய்த கொடுமை, தற்போது சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாபமாக மாறிவிட்டது. – இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்காக வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் கைவிடப்பட்டு 13 வருடங்கள் ஆன நிலையிலும், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

தமிழ் மக்களுக்கு விளைவித்த பாவமே தற்போது சாபக்கேடாக மாறி இந்த ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் நிலையை உருவாகி உள்ளது.

யார் நாட்டை ஆட்சி செய்தாலும் நமக்கு பிரச்சினை இல்லை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அடிப்படை உரிமையினை பெற்று தருவதையே நாம் கேட்கின்றோம்.

ஆனால் நாட்டு மக்கள் வறுமைக்குள் சிக்குண்டு அழிவடைந்தாலும் பிரச்சனை இல்லை. தாம் ஆட்சியை விட்டு விலகப்போவதில்லை என்று அரசாங்கம் விடாப்பிடியாக உள்ளது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...