20220408 143251 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மீண்டும் தலைதூக்க போகின்றது தமிழர் விடுதலைக் கூட்டணி! – செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி

Share

இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது அக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வீ.ஆனந்தசங்கரி இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு தரவேண்டும் நாளை(9) காலை 11 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் கூடி தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்றார்.

சமகால நிலைமைகள் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆடம்பர செயற்பாடுகளை கைவிட வேண்டும்.

மத ரீதியாக ஜனாதிபதி செயற்பட்டதாலே இந்த நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி தனது செல்வாக்கை பயன்படுத்தி இனப்பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும் . ஆனால் அவர் அதனை செய்யவில்லை.

சிங்கள மக்களையும் அரசாங்கத்தையும் மோத விட்டு நாங்கள் வேடிக்கை பார்க்க கூடாது. அது தவறு . எல்லோருக்கும் உள்ள பொதுப் பிரச்சினையை தீர்க்க நாம் வழியை தேட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...