SAGA2932 2
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுடன் ஜெய்சங்கர் மூடிய அறைக்குள் பேச்சு!

Share

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்தார்.

இருவருக்கும் இடையில் பல நிமிடங்கள் மூடிய அறைக்குள் பேச்சு இடம்பெற்றது எனத் தெரியவந்துள்ளது.

கொழும்பில் இன்று ஆரம்பமான ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார். ஜெய்சங்கரின் வருகை தொடர்பில் மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா கடனாக வழங்கியதற்கு நன்றி கூறினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...