selvam
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வகட்சி மாநாடு! – டெலோவும் புறக்கணிப்பு

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோவும் தீர்மானித்துள்ளது.

ஈழத் தமிழர் விவகாரத்தில் அரசு கையாளும் பொறுப்பற்ற அணுகுமுறை மற்றும் பல தரப்புகளிடம் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரமே தமது கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது என ரெலோ அறிவித்துள்ளது.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ். வந்திருந்தபோது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பாதுகாப்பு தரப்பினரால் நடத்தப்பட்ட விதம் தொடர்பில் கடும் விசனத்தை வெளியிட்டுள்ள ரெலோ, புறக்கணிப்புக்கு இந்த விடயத்தையும் ஒரு காரணமாக குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி மற்றும் புளொட் என்பன சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...