20220320 145604 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இந்த ஆட்சியாளர்களால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாது! – சந்திரசேகரன்

Share

யாழ்ப்பாணம் வந்த பிரதமர் மக்கள் பிரச்சினைகளை கேட்காமல், மக்கள் நடமாட்டமில்லாத ரகசியமான முறையில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ. சந்திரசேகரன் தெரிவித்தார்.

இன்று மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது எல்லாவற்றிற்குமே வரிசையில் நிற்க வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. பால்மா மற்றும் எரிவாயு சிலிண்டர், எரிபொருட்களை பெறுவதில் பாரிய பிரச்சனையே காணப்படுகின்றது. கல்வித்துறையில் வினாத்தாள்களை பெற்றுக் கொள்வதற்கு கூட வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த நெருக்கடி மேலும் மோசமடைய கூடிய வாய்ப்பை காணப்படுகின்றது இந்த ஆட்சியை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். முழு நாட்டு மக்களும் அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரண்டு உள்ளார்கள். ஜனாதிபதியின் உரை என்பது பழைய குருடி கதவை திறடி என்பது போன்று பழைய புராணங்களை பாடும் ஒன்றாகவே காணப்பட்டது.

ஆட்சியாளர்கள் பிரச்சனைகளை தங்கள் தீர்க்க முடியாது போகும்போது கடந்த கால ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்தும் நிலையே காணப்படுகிறது. கோட்டாபய ராஜபக்சவின் உரையும் முன்னைய அரசாங்கங்களை குற்றம் சாட்டுவதாகவே காணப்படுகிறது.

மருந்துப் பொருட்களின் விலைகள் என்பது அதிகரித்து காணப்படுகின்றது. மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த தற்போது மூடப்பட்டு காணப்படுகிறது. எல்லா பிரச்சினையை தீர்ப்போம் என்று ஆட்சியாளர்கள் கூறினார்கள். ஆனால் தற்போது இரண்டு வருடம் கடந்த பின்பும் அவர்களால் அதை செய்ய முடியவில்லை.

மக்கள் நெருக்கடியில் தவிக்கின்றபோது அமைச்சர்களோ சொகுசு வாழ்க்கையிலும் நீர் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். எமது நாட்டை இந்தியாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததன் மூலம் ஒரு லட்சம் அமெரிக்க டொலர் கிடைத்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் வந்த பிரதமர் மக்கள் பிரச்சினைகளை கேட்காமல், மக்கள் நடமாட்டமில்லாத ரகசியமான முறையில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாது.

74 வருடங்களாக இதே திருட்டு கும்பலே இந்த நாட்டை ஆட்சி செய்தது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மாற்றத்திற்கான செயற்பாட்டை மக்கள் விடுதலை முன்னணியாகிய நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக நாடு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டங்களை செய்து வருகின்றோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tf
இலங்கை

அனுமதி பத்திரமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை .

பன்னல, எலபடகம பகுதியில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த...

dengue original
இலங்கை

சடுதியாக உயர்வடைந்தது டெங்கு மரணங்களின் எண்ணிக்கை!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033...

body
இலங்கை

மன்னாரில் மீட்கப்பட்ட சடலம்!

நேற்று காலை மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின்...

Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...