2
செய்திகள்அரசியல்இலங்கை

“ரீ குடிக்க நான் வரவில்லை” – அங்கஜனுக்கு கீதநாத் பதிலடி

Share

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தவே யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் நான் பிரதமரின் நேரடிப் பணிப்பின் பேரில் நியமிக்கப்பட்டிருக்கின்றேனே தவிர ரீயும், வடையும் சாப்பிட்டுச் செல்வதற்கல்ல என்று தெரிவித்தார் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப் குழுவில் பிரதமரின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள காசிலிங்கம் கீதநாத்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார வரம் என்பது பிரதமரூடாக நேராக அணுக வேண்டிய பிரச்சினைகளுக்குத் துரிதமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகும்.

மாவட்டத்தின் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தும் முகமாக பிரதமரின் நேரடிப் பணிப்பின் கீழேயே இந்தப் பதவி எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதன் பலாபலன்களை வெகுவிரைவில் அனைவரும் உணர்ந்துகொள்வார்கள். எமது பணி செயலில் காட்டுவதேயன்றி வாய்வீச்சில் காட்டுவதல்ல.

பிரதமரின் பெயரையோ பிரதமர் அலுவலகத்தின் பெயரையோ ஒருபோதும் நான் துஷ்பிரயோகப்படுத்துவதில்லை.

பிரதமரின் தூரநோக்குத் திட்டங்களைச் செயலுருப்பெறச் செய்வதும் எமது அரசின் கொள்கைத் திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதுமே எமது தலையாய கடமையாகும்.

இதற்கு அரசியல் சாயம் பூசநினைப்பது அவரவரின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியேயன்றி வேறெதுவும் இல்லை.

எனக்கு அரசியலுக்கு வரவேண்டிய எந்தவிதமான அவசியமுமோ – விருப்பமோ அறவே இல்லை. அப்படியே அரசியலுக்கு வந்தாலும் நான் ‘தவளை அரசியல்’ செய்யமாட்டேன்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எக்காரணங்களுக்காகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச என்னைப் பணி நீக்கவில்லை. என்னுடைய பதிவுத்திருமணம், திருமணம் உட்பட அனைத்து சுப நிகழ்வுகளிலும் முதலில் வந்து தனது வாழ்த்துகளையும் ஆசியையும் வழங்குபவர் அமைச்சர் நாமல் ராஜபக்சதான். ஆகையினால் இதுவரை எமக்குள் எந்தவித கசப்புணர்வும் ஏற்பட்டதில்லை என்பதைப் பொறுப்புணர்வுடன் கூறிக்கொள்கிறேன்.

அர்த்தமற்ற , நகைப்புக்கிடமான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்கும் அளவுக்கு எனக்கு நேரமில்லை.

என் மீது குற்றஞ்சாட்டுபவர் பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் அமைச்சரிடமும் மாறிமாறி என்னைப் பற்றிப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார், வருகின்றார், வருவார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...