Medicines
செய்திகள்இலங்கை

நாட்டில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு!

Share

நாட்டில் பாரிய மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் (ACPPOA) தலைவர் சண்டிக கங்கந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர்,

நாட்டில் தற்போதுள்ள மருந்துகளின் இருப்பு மூன்று மாதங்களுக்கே போதுமானது. அத்தியாவசியமான மருந்துகளுக்கு நாட்டில் 5% தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலான மருந்தகங்கள் மாற்று வர்த்தக நாமங்களையுடைய மருந்துகளையே தற்போது நுகர்வோருக்கு வழங்கி வருகின்றன. இந்த நடைமுறையை நீண்டகாலத்துக்கு நீடிக்க முடியாது.

மருந்து பிரச்சினை என்பது நாட்டின் அனைத்து மக்களின் ஆரோக்கியம் சம்பந்தமானது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஏனைய பொருட்களின் தட்டுப்பாட்டை விட மருந்து தட்டுப்பாட்டு பிரச்சினையால் நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும்.

இதனை நிவர்த்திசெய்ய அரசாங்கம் தலையிடாவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை காரணமாக மருந்துகளை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், சில மருந்துகளுக்கு விலையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் கட்டுப்பாட்டு விலைக்கு உட்பட்டால் பெரும்பாலான மருந்தகங்களில் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.

தொடர்ச்சியாக மருந்துகளுக்கு தட்டுப்பாடு தொடருமாயின், இன்சுலின் மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது, நாட்டில் பரசிட்டமோல், பனடோல், பனடீன், ஃப்ரீசியம், சாதாரண உப்பு மற்றும் ஜினாட் உள்ளிட்ட மருந்துகளில் பெரும்பாலானவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக் சிரப்புகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது, கொவிட், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை சமூகத்தில் அச்சுறுத்தலாக உள்ள நிலையில், பரசிட்டமோல் மாத்திரைகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சந்தைக்கு பரசிட்டமோல் போதியளவு விநியோகம் இல்லாமையால் நாட்டில் பரவலாக தட்டுப்பாடு நிலவி வருகிறது – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...