Arundika Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

பதவியை இராஜினாமா செய்யுமாறு அருந்திக்கவுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Share

அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளாரென அறியமுடிகின்றது.

இது தொடர்பில் பஸில் ராஜபக்சவுக்கு, அருந்திக்க பெர்ணான்டோ அறிவித்துள்ளார் எனவும், இது சம்பந்தமாக தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடும்வரை இராஜினாமா கடிதத்தை அனுப்ப வேண்டாமென பஸில் ராஜபக்ச ஆலோசனை வழங்கினார் எனவும் தெரியவருகின்றது.

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் இராஜாங்க அமைச்சருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் அமைச்சுக்குரிய வாகனமும், அவரின் அதிகாரி ஒருவரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டமை தெரியவந்தது.

அதேவேளை, அருந்திக்க பெர்ணான்டோவின் மகனும் இச் சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்டார்.

மேற்படி சம்பவத்துடன் தனக்கு தொடர்பிருப்பது உறுதிப்படுத்தப்படுமானால் அமைச்சு பதவி துறக்கப்படும் என அருந்திக்க பெர்ணான்டோ அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...