Mathura Vithanage
இலங்கைஅரசியல்செய்திகள்

பொருளாதார பலமிக்க நாட்டைக் கையளிக்கவில்லை: பெரமுன

Share

பொருளாதார பலமிக்க நாட்டைத் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கையளித்ததாக எதிர்க்கட்சியால் கூறமுடியாது.

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

கொவிட் வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடாக எமது நாடு முன்னிலை வகிக்கின்றது. பொருளாதார பலத்துடன், நாட்டை கடந்த ஆட்சி ஒப்படைக்கவில்லை. ஏனெனில், அவர்களால் வெற்றிகரமாக நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. இதனால் மக்களின் ஆணை எமக்குக் கிடைத்தது.

உட்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு மேம்படுத்தினோம், பொருளாதார பலமிக்க நாட்டையே நாம் கையளித்தோம் என்று எதிர்க்கட்சியால் எதனையும் கூறி முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...