WhatsApp Image 2021 12 16 at 4.50.42 PM
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டணி அமைக்க சாத்தியமே இல்லை! – அநுரகுமார திட்டவட்டம்

Share

” பிரதான கட்சிகள் எனக் கூறிக்கொள்ளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கமாட்டோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஆட்சியைப்பிடித்து பதவிகளை பங்கிடுவதற்காகவே கடந்த காலங்களில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது சம்பிரதாய நடவடிக்கையாகவும் மாறியுள்ளது. இந்த கூட்டணி கோட்பாடு எமக்கு பொருந்தாது.

தேசிய மக்கள் சக்தியும் கூட்டமைப்புதான். அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் அங்கம் எமது கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். எமது கூட்டணிக்கான ஆதரவு பெருகிவருகின்றது.

எனவே, பிரதான கட்சிகள் எனக்கூறிக்கொள்ளும் இரண்டு தரப்புகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாம் கூட்டணி அமைக்கமாட்டோம்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....