யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவரை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ் இந்திய துணைத்தூதுவராலயத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா, செயலாளர், பொருளாளர், உப தலைவர் ஆகியோர் கலந்துகொண்டண்டனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த அத்துமீறலால் எமது மீனவர்கள் கூலித் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதோடு குடிப்பரம்பலும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிராக நீண்ட காலமாக பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிற. எனினும் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களில் இந்திய மீனவர்களின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த வருகையை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறோம்.
இந்தநிலையில், இன்றைய தினம் யாழ். இந்திய துணைத் தூதரை சந்தித்து பேசி உள்ளோம்
குறிப்பாக, இந்திய மீனவர்களின் அத்துமீறலால் நாம் பல கோடி ரூபா சொத்துகளை இழந்துள்ளோம். இந்திய மீனவர்களுக்கும் வடக்கு மீனவர்களுக்கும் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.
இலங்கை கடற்தொழில் அமைச்சு 500 கோடி ரூபாக்கு மேல் இந்திய அரசாங்கத்திடம் நஷ்டஈடு கோரியுள்ளது. இருந்தபோதிலும், அண்ணளவாக 400 மில்லியன் ரூபாவை எங்களுடைய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்குமாறு கூறி, அதற்குரிய திட்டத்தை கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்திருக்கின்றோம்.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இந்திய துணை தூதுவரிடமும் கையளித்துள்ளோம். இந்த கோரிக்கையினை பரிசீலிப்பதாக யாழ். இந்திய துணைத் தூதுவர் தெரிவித்த்துள்ளார்.
இதேவேளை, இலங்கைமீனவர்களின் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் யாழ். இந்திய துணைத் தூதுவர் பேசி உள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம் – என்றார்.
#SriLankaNews
Leave a comment