jaffna 1 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் கொரோனா தடுப்பு செயலணி கூட்டம்

Share

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த செயலணி கூட்டத்தின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுள்ள நிலைமையில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில்  ஆராயப்பட்டுள்ளதுடன் மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக டெங்கு தொற்று நிலைமை மற்றும் அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், 51வது பிரிவின் இராணுவத் தளபதி சந்தன விக்ரமசிங்க, யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர், முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மண்ற தலைவர்கள், சுகாதார அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...