நாட்டின் வளங்கள் நாளாந்தம் அடகு வைக்கப்படுகின்றன என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், உர நெருக்கடியால் விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நிலையில், நானோ நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்து நிதியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர்.
நாட்டின் வளங்கள் நாளாந்தம் விற்கப்படுகின்றன. மேற்கு முனையம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு துறைமுகத்தின் 13 ஏக்கர் காணியையும் அரசாங்கம் சீனாவிடம் கையளித்துள்ளது.
கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதியும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய கடன் நெருக்கடியானது கொவிட்-19 தொற்று நோயினால் அல்ல. அதிகாரத்தில் உள்ளவர்களினால்தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment