fsgtyriujgb
உலகம்

கொலம்பியாவினை உலுக்கிய நிலநடுக்கம்.

Share

இன்றைய தினம், மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாகவும் இதனால் நாட்டின் பல நகரங்களில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) குறிப்பிட்டுள்ளது.

குறித்த, நிலநடுக்கத்தின் மையம் சாஃகோ திணைக்களத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மரில், போகொடாவுக்கு மேற்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில், 107 கிலோமீற்றர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு பதிவாகியுள்ளது.

அத்துடன், சாஃகோ பிராந்தியத்தின் ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா கூரி, பிராந்தியத் தலைநகரான கிப்டோவில் “காயங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது” என்பதை உறுதிப்படுத்தியதுடன், நிலநடுக்கத்திற்குப் பிந்தைய தொடர் அதிர்வுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைநகரான போகொடாவில், அதிர்வு பலமாக உணரப்பட்டதுடன், எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் கட்டிடங்களை விட்டு வீதிகளுக்கு வெளியேறினர்.

“தற்போது வரை காயங்களோ அல்லது பெரிய அளவிலான கட்டமைப்புச் சேதங்களோ பதிவாகவில்லை, சில கட்டிடங்களில் சிறிய விரிசல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன” என்று போகொடா மேயர் கார்ட்லோஸ் கெலன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
gunshootpolise 1
உலகம்

மிச்சிகன் மாநிலத்தில் துப்பாக்கி சூடு – துப்பாக்கிதாரி உள்ளிட்ட பலர் பலி!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச்சூட்டை...

தாய்வானில்
உலகம்

தாய்வானில் முடக்கப்பட்ட இணைய சேவை – சீனாவின் அச்சுறுத்தலின் விளைவாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்!

தாய்வானில் முன்னெடுக்கப்பட்டு வரும் வருடாந்த ‘ஹான் குவாங்’ இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாகத் தலைநகர் தாய்பேயில்...

ஜப்பானில் கொலை
உலகம்

ஜப்பானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

ஜப்பானில் கல்வி பயின்று வந்த, 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் சிபா (Chiba) மாநிலத்தில்...

hourthis red sea Houthi Rebels Attack Cargo Ship In Gulf Of Aden
உலகம்

சர்வதேச கடற்பரப்பில் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் – உயிரிழந்துள்ள பணியாளர்கள்!

செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தெப் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்றின் மீது...