நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

Share

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேற்படி, இரண்டு சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் இன்று முற்பகல் 11.45 மணி முதல் பிற்பகல் 5.40 மணி வரை நடைபெற்ற நிலையில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலத்தை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் 2026.07.21 அன்று பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்காக சமர்ப்பித்திருந்தார்.

இந்த சட்டமூலத்தின் மூலம், இதற்கு முன்னர் மாடுகள் மற்றும் எருமைகளைப் போக்குவரத்து செய்வதற்கு மட்டுமே பொருந்தியிருந்த சட்ட ஏற்பாடுகளை மேலும் பல வகையான விலங்குகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்காலத்தில் பன்றிகள், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் போக்குவரத்து செய்யும்போது உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்படுவதுடன், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் பரவுவதைத் தடுப்பதும் பிரதான நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை (திருத்தச்) சட்டமூலம் வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சரினால் 2026.07.21 அன்று பாராளுமன்றத்தில் முதலாம் மதிப்பீட்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்தின் மூலம், தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபையின் நிறுவன ரீதியான செயல்திறனை மேம்படுத்துதல், நீர் வழங்கல் சேவைகளின் முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குபடுத்துதல் மற்றும் சபையின் பொறுப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை நோக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...