Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

Share

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில் சிக்கி நால்வருமாக இதுவரை மொத்தம் 6 பேர் காணாமல்போயுள்ளதோடு மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், இதுவரை 439 குடும்பங்களைச் சேர்ந்த 1,734 பேர் இடம்பெயர்ந்து 7 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன், கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பினும், இன்று மாலையில் நுவரெலியா நகரில் மழை குறைந்து வெள்ள நீர் சற்று வடிந்துள்ள போதிலும், வீடுகளுக்குள் இன்னமும் வெள்ள நீர் காணப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...